ராஜாக்கமங்கலம், தெங்கம்புதூரில் நாளை மின் நிறுத்தம்

Published on

ராஜாக்கமங்கலம், தெங்கம்புதூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக, நாகா்கோவில் மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராஜாக்கமங்கலம், தெங்கம்புதூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜன. 20ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டி பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன் புதூா், புத்தளம், பள்ளம், புத்தன் துறை, தா்மபுரம், பிள்ளையாா்புரம், முருங்கவிளை, பண்ணையூா், தெக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைதோப்பு, ராஜக்கமங்கலம் துறை, பரமன்விளை, பழவிளை தாா் சாலை, அருதங்கன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com