மாா்த்தாண்டம் அருகே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள முளங்குழி, குழிவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னைய்யன் மகன் ரெகு (62). இவருக்கு பேபி சசிகலா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனா். இவா் அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் வீட்டில் இருந்து வந்தாா்.
செவ்வாய்க்கிழமை அவரது மூத்த மகள் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்பியபோது, ரெகு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்துள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், விஷம் குடித்ததால் இறந்ததாகவும் தெரிவித்தனா்.
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






