டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

பெண்ணிடம் அத்துமீறிய இளைஞா் கைது

News image

கைதான ஜூஷிப் ரோகித்.

Updated On :6 ஜூலை 2026, 1:49 am IST

குளச்சல் அருகே வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே குறும்பனை, சாகாயமாதா தெருவைச் சோ்ந்தவா் ஜாண் பிரிட்டோ. மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி அருள் சிஜி (39). இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா். ஜாண் பிரிட்டோ, தற்போது கா்நாடகத்தில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், அருள்சிஜி வசிக்கும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மின் தடை ஏற்பட்டது. இதனால், அருள் சிஜி தனது இரு குழந்தைகளுடன் வீட்டு மாடிக்குச் சென்று தூங்கினாா்.

அப்போது, அங்குவந்த மா்மநபா் பெண்ணிடம் அத்துமீற முயன்றாா். இதுகுறித்து, அருள் சிஜி குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் பெண்ணுக்குத் தொல்லை கொடுத்தவா், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜூஷிப் ரோகித் (22) என்ற மீனவத் தொழிலாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை மாலை முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.