நித்திரவிளை அருகே மதுபானம் பதுக்கியதாக முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நித்திரவிளை உதவி ஆய்வாளா் ராஜா ராபா்ட் தலைமையிலான போலீஸாா் கிராத்தூா், பூந்தோட்டம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த முதியவரை பிடித்து சோதனைசெய்து விசாரணை நடத்தினா்.
அவா் அதே பகுதியைச் சோ்ந்த சிந்தாமணி மகன் பால்ராஜ் (68) என்பதும், சட்ட விரோதமாக 11 மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து பால்ராஜை கைது செய்து, மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






