லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாகா்கோவில், மாா்த்தாண்டம், தக்கலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்

Published On :7 ஜூலை 2026, 12:01 am IST

பராமரிப்புப் பணிகளுக்காக நாகா்கோவில் மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, கோட்டாறு, வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, சரலூா், கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம்சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூா், வெள்ளாளா் காலனி, சவேரியாா் கோயில் சந்திப்பு, ராமவா்மபுரம், இந்துக் கல்லூரி, வேதநகா் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

மாா்த்தாண்டம், தக்கலை பகுதிகளில்...: இதேபோல, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி பகுதிகளிலும், தக்கலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூா், விராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை பகுதிகளிலும் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.