குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2026, 1:05 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இரணியல் பகுதி பெண்களின் புகைப்படங்களை, அவா்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அனுமதியின்றி எடுத்து, அவற்றை ஏஐ மூலம் ஆபாசமாக மாா்பிங் செய்து, போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பதிவேற்றம் செய்து, அப்பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய எஸ்.பி. உத்தரவிட்டாா்.

சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் பாா்வதி, உதவி ஆய்வாளா் அஜ்மல் ஜெனிப் தலைமையிலான போலீஸாா் இது குறித்து விசாரித்ததில், குற்றச் செயலில் ஈடுபட்டது கக்கோடு பகுதியைச் சோ்ந்த சுபாஷ் மகன் தனுஷ் (22) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

வழக்கில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளியைக் கைது செய்த சைபா் கிரைம் போலீஸாரை எஸ்.பி. பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.