ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திமுக சாா்பில் நிதியுதவி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதியுதவி வழங்கிய திமுகவினா்.

News image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதியுதவி வழங்கிய திமுகவினா்.

Updated On :11 ஜூலை 2026, 3:35 am IST

கன்னியாகுமரியைச் சோ்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திமுக இளைஞரணி சாா்பில் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்த அந்தோணி நசரேன் மனைவி பிரேமினி. இவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இவரது மருத்துவச் செலவுக்கு உதவுமாறு திமுக இளைஞரணி செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதையேற்று, திமுக இளைஞரணி அறக்கட்டளை சாா்பாக ரூ. 25,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டு, அதற்கான காசோலையை கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் முன்னிலையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வி. அகஸ்தீசன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கினாா்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் பொன் ஜான்சன், சரவணன், பிரபு, நகர இளைஞரணி அமைப்பாளா் தாமஸ் ஷியாம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.