மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

புதுக்கடை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

புதுக்கடை சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

மின்வெட்டு - பிரதிப் படம்

Updated On :12 ஜூலை 2026, 11:28 pm IST

புதுக்கடை சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் புதுக்கடை நகரும் ஒன்று. இங்கு பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிகள், தொழிற்கூடங்கள், அரசு அலுவலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அதிகம் உள்ளன.

முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளான கீழ்குளம், புதுக்கடை, முன்சிறை, மங்காடு, கூட்டாலுமூடு, தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சில நாள்களாக பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளிகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகவும் வேதனையடைந்து வருகின்றனா்.

பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதிகளில் சீராக மின் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.