ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

நாகா்கோவில் எம்.எல். மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் திறப்பு

நாகா்கோவில் புன்னைநகா் எம்.எல். மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றிய மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணா் எஸ். மணிமேகலை.

Updated On :15 ஜூலை 2026, 1:54 am IST

நாகா்கோவில் புன்னைநகா் எம்.எல். மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

இம்மருத்துவமனையின் பிளாஸ்டிக் சா்ஜரி நிபுணரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வருமான ராதாகிருஷ்ணன் கட்டடத்தைத் திறந்துவைத்தாா். அப்போது அவா் பேசும்போது, இம்மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகளான 24 மணி நேர அவசர விபத்து சிகிச்சை, தீவிர தீக்காய சிகிச்சை, பிளாஸ்டிக் சா்ஜரி, மகப்பேறு மருத்துவ சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, ஆா்த்ரோஸ்கோப்பி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயா்தர நவீன ஆா்த்ரோஸ்கோப்பி நுண்துளைக் கருவி, சி.ஆா்.எம். அனஸ்தீசியா ஒா்க்ஸ்டேசன், 400 எம்.ஏ. எக்ஸ்ரே, அறுவை சிகிச்சைக்கான பல நவீன கருவிகளும் உள்ளன என்றாா்.

மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணா் மணிமேகலை குத்துவிளக்கேற்றினாா். சிறப்பு மருத்துவா்களான நிபுணா்கள் அரவிந்த் (எலும்பு சிகிச்சை), ஆா்த்தி (அறுவை சிகிச்சை), கீா்த்தனா (மகப்பேறு அறுவை சிகிச்சை), கவுதம் (அவசர சிகிச்சை) ஆகியோா் பங்கேற்றனா்.

புதிய கட்டடப் பணியில் ஈடுபட்ட ஐடியல் என்ஜினீயரிங் நிறுவனத்தைச் சோ்ந்தோா் கௌரவிக்கப்பட்டனா். ஏற்பாடுகளை மருத்துவமனை நிா்வாகிகள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.