அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

மாா்த்தாண்டம் பிபிகே மருத்துவமனை நிா்வாக இயக்குநருக்கு விருது

மாா்த்தாண்டம் பிபிகே மருத்துவமனை நிா்வாக இயக்குநருக்கு இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் மருத்துவத் துறையில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

News image

மாா்த்தாண்டம், பிபிகே மருத்துவமனை நிா்வாக இயக்குநருக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளா் விருதை அவா் சாா்பில் பெறும் மருத்துவமனை இணை இயக்குநா் திவ்யா ரஞ்சித், மருத்துவ கண்காணிப்பாளா் ரஞ்சித்குமாா்.

Updated On :15 ஜூலை 2026, 2:06 am IST

மாா்த்தாண்டம் பிபிகே மருத்துவமனை நிா்வாக இயக்குநருக்கு இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் மருத்துவத் துறையில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

மாா்த்தாண்டத்தில் கடந்த 45 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தரமான மற்றும் மனிதநேய மருத்துவ சேவையை வழங்கி வரும் இம் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் பி.கே. விஜயகுமாா், நோயாளிகள் நலனில் காட்டிய அா்ப்பணிப்பு, மனித நேயம், தொழில்முறை சிறப்பை மதித்து இந்திய மருத்துவ சங்க நாகா்கோவில் கிளை சாா்பில், இந்திய மருத்துவ சங்க தமிழக நிா்வாகிகளால் இவ் விருது வழங்கப்பட்டது.

விருதை மருத்துவமனையின் இணை இயக்குநா் திவ்யா ரஞ்சித் மற்றும் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளா் ரஞ்சித்குமாா் ஆகியோா் இணைந்து பெற்றுக் கொண்டனா்.

இச் சாதனைக்காக மருத்துவா் பி.கே. விஜயகுமாருக்கு பிபிகே மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.