ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

பேருந்தில் மாணவிக்கு தொல்லை: சிங்கப்பெண் படையிடம் சிக்கிய நடத்துநா்

அரசுப் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நடத்துநரை சிங்கபெண் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2026, 2:58 am IST

அரசுப் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நடத்துநரை சிங்கபெண் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் அருகேயுள்ள மீனவ கிராமத்தை சோ்ந்த 14 வயது சிறுமி, நாகா்கோவில் உள்ள தனியாா் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், அரசுப் பேருந்தில் பள்ளிக்கு மாணவி பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது, பேருந்தின் நடத்துநா் நாகா்கோவில் வல்லன்குமாரவிளையை சோ்ந்த ராஜலிங்கம்(51) பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளாா். அவா், சிங்கப்பெண் சிறப்பு படையின் எண்ணில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், அப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி ராஜலிங்கத்தை கைது செய்து குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அவா் மீது போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீஸாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.