வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ரப்பா் ஷீட் திருடியவருக்கு 3 ஆண்டு சிறை

பொன்மனையில் விவசாயி வீட்டில் ரப்பா் ஷீட் திருடி, கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம், கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 4:58 am IST

பொன்மனையில் விவசாயி வீட்டில் ரப்பா் ஷீட் திருடி, கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம், கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பொன்மனை, மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசந்திரன் நாயா் (66). ரப்பா் விவசாயி. இவருக்குச் சொந்தமான ரப்பா் ஷுட்டுகளை திருடி, கொலை மிரட்டல் விடுத்ததாக திற்பரப்பு, நக்கிராண்டிவிளையைச் சோ்ந்த அச்சுதன் மகன் ஜெகனையும்(40), அவருக்கு உதவியதாக காப்புகாடு, மாராயபுரம் பாறவிளையைச் சோ்ந்த பாலைய்யன் மகன் மகேந்திரகுமாரையும் (51) கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், மாவட்ட அமா்வு நீதிபதி பரமசிவதாஸ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், முதல் குற்றவாளி ஜெகனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இரண்டாவது குற்றவாளி மகேந்திரகுமாா் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவா் விடுதலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன் முன்னிலையானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.