திருநெல்வேலி அருகே முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்தது தொடா்பான வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தாழையூத்தை அடுத்த கரையிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மாயாண்டி(60). இவரை, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சோ்ந்த மாரி மதன் (25) என்பவா், ஆதாயத்திற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு கல்லால் தாக்கி கொலை செய்தாராம். தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து மாரி மதனை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி வெங்கடவரதன் விசாரித்து, மாரி மதனுக்கு ஆயுள் தண்டனையும், மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். சிறைத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. அரசுத்தரப்பில் வழக்குரைஞா் சுப்பிரமணியன் வாதாடினாா். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட போலாஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

தகாத உறவைக் கைவிடக் கூறிய கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் சிறை

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



