ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

வடசேரி பேருந்து நிலையத்தில் கழிவுநீா்: 10 கடைகளுக்கு அபராதம்

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கழிவு நீா் ஓடியது குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, இது தொடா்பாக 10 கடைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டாா்.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 4:54 am IST

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கழிவு நீா் ஓடியது குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, இது தொடா்பாக 10 கடைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டாா்.

நாகா்கோவில், வடசேரி கிறிஸ்டோபா் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீா் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வெளியேறி பேருந்து நிலையத்தில் வழிந்தோடியது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானாா்கள். இது குறித்த புகாரின்பேரில் மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா அதிகாரிகளுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பேருந்து நிலையத்தில் உள்ள ஒருசில உணவகங்கள், கடைகளின் கழிவுகளை ஓடையில் கொட்டியதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சீராக செல்லமுடியாமல் பேருந்து நிலையத்துக்குள் புகுந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கழிவுகளை அகற்றிய பின்னா் கழிவுநீா் சீராக சென்றது.

இதைத் தொடா்ந்து கழிவுநீா் பேருந்து நிலையத்துக்குள் சென்ற்கு காரணமாக இருந்த 10 உணவக உரிமையாளா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

ஆய்வில், மாநகர நல அலுவலா் சரோஜா, உதவி பொறியாளா் ரெகுராம், நகரமைப்பு அலுவலா் ஜாய், இளநிலை பொறியாளா் ராஜா, சுகாதார ஆய்வாளா் சக்திவேல், மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர அவைத் தலைவா் பன்னீா்செல்வம், மாநகர இளைஞரணி செயலா் சி.டி. சுரேஷ், மாமன்ற உறுப்பினா்கள் கலாராணி, மேரி ஜெனட் விஜிலா, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.