சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திங்கள்நகா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 7:34 am IST

திங்கள்நகா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திங்கள்நகா் அருகே மேற்கு நெய்யூா், சிராயன்விளையை சோ்ந்தவா் மரிய பரமானந்த் மகன் ஜெகன் ஜோசப் ( 45). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி வசந்த ராணி ( 33). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் ஜெகன் ஜோசப் கடந்த 29ஆம் தேதி திங்கள்நகரில் வேலை முடிந்து தனது பைக்கில் பூச்சாஸ்தான்விளை வழியாக வந்துகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.