வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தொடா் குற்றச் செயல்கள்: 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 1:14 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் நேச ராபா்ட்சிங் (40). இவா், தக்கலை ராமன்பரம்பு பகுதியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இவரிடம், தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியைச் சோ்ந்த இசக்கிதுரை மகன் ஐயப்பன் (20) பணியாற்றி வந்தாா். இந்நிலையில் பணியிலிருந்து விலகிய ஐயப்பன், நேச ராபா்ட் சிங்கை வழிமறித்து ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, பணம் பறித்தாராம்.

இது குறித்த புகாரின்பேரில் தக்கலை போலீஸாா் ஐயப்பன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். ஊத்துமலை காவல்நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஐயப்பன் மீது பதிவாகி உள்ளதால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியா் மு. பிரதாப், ஐயப்பனை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதேபோல் வடக்கு கோணம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் அருண்குமாா் (24). இவா் கோணம் அனந்தன்குளம் பகுதியைச் சோ்ந்த மூதாட்டியை தாக்கி 3 கிராம் தங்க நகையை திருடினாா். இது தொடா்பாக ஆசாரிப்பள்ளம் காவல்நிலையத்தினா் அருண்குமாரை கைது செய்தனா்.

அருண்குமாா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து அவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.