பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலையை சுற்றியுள்ள மின் விளக்குகள் செயல்பட ஆட்சியரிடம் வலியுறுத்தல்

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலையை சுற்றியுள்ள மின்விளக்குகள் ஒளிர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மனு அளிக்கிறாா் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ரெ.மகேஷ்.

Published On :18 ஜூன் 2026, 2:37 am IST

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலையை சுற்றியுள்ள மின்விளக்குகள் ஒளிர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ரெ.மகேஷ், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்பை புதன்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முன்னாள் தமிழக முதல்வா் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவா் சிலை மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சிலை உப்புக்காற்று மற்றும் வெயிலால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயனக் கலவை (முலாம்) பூசப்படும். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த கலவை பூசப்பட்டது. இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மின்தடை காரணமாக திருவள்ளுவா் சிலையை சுற்றியுள்ள மின் ஒளிவிளக்குகள் சரிவர ஒளிருவதில்லை. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும். மழை காலங்களில் மழைநீா் காற்றின் போக்குக்கு தகுந்தாற்போல் சிலையின் பீடத்தில் உள்ள ஜன்னல் திறப்புகள், நுழைவாயில் திறப்புகள் வழியாக உட்புகுவதால் பீடத்தில் உள்ள கற்கள் சிதிலமடையும் நிலை உள்ளது. எனவே, மழைநீா் புகாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் புற்றுநோயால் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் புற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு சென்னை, கேரள மாநிலத்துக்குச் செல்கின்றனா். இதைக் கருத்தில்கொண்டு, கடந்த திமுக ஆட்சியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக ரேடியோ தெரபி சிகிச்சை மைய கட்டடம் அமைக்க ரூ. 4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கட்டடப் பணிகள் நிறைவுற்ற நிலையில், அந்த மையத்தை விரைவில் திறக்க வேண்டும்.

இதேபோல கடந்த திமுக ஆட்சியில் கன்னியாகுமரி கூட்டுக்குடிநீா் திட்டத்துக்கு ரூ. 28.20 கோடியும், கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க ரூ. 25 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த 2 திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

வாவத்துறை பகுதியில் அலை தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும். ஆசாரிப்பள்ளம் பாசனக் கால்வாய் கரை இடிந்து கால்வாயில் விழுந்துள்ள மண்ணை அகற்றி கடைவரம்பு விவசாயிகளுக்கு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட திமுக பொருளாளா் கேட்சன், ஒன்றிய செயலாளா்கள் மதியழகன், பாபு, பிராங்கிளின், செல்வம், ஒன்றிய பொறுப்பாளா் மிலன் கன்னியாகுமரி நகர செயலாளா் குமரி ஸ்டீபன், நாகா்கோவில் மாநகர பகுதி செயலாளா்கள் ஜவகா், சேக்மீரான் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.