சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

News image
Updated On :4 ஜூன் 2026, 6:25 am IST

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், கருணாநிதியின் படத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.காந்தி மரியாதை செலுத்தினாா்.தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நகர திமுக சாா்பில், முத்துகடை பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா்.

இதில் திமுக சுற்றுசுழல் அணி மாநில துணை செயலாளா் ஆா்.வினோத் காந்தி, மாவட்ட அவைத்தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, மாவட்ட துணை செயலாளா் குமுதா குமாா், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஜி.கே.குழுமம் சந்தோஷ் காந்தி, நகர செயலாளா் பி.பூங்காவனம், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகர துணை செயலாளா்கள் குமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ஆம்பூரில்...

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு, தேவலாபுரம் ஊராட்சி எல்.மாங்குப்பம் கிராமங்களில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி, ஒன்றிய அவைத் தலைவா் சிவக்குமாா், மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

வெங்கட் சமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமை வகித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா், மாதனூா் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ. வி. அசோக் குமாா், கதவாலம் ஊராட்சி தலைவா் சக்தி கணேஷ், ஒன்றிய திமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

அரக்கோணத்தில்...

அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டையில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய ஒன்றிய திமுக செயலாளா் கே.பசுபதி தலைமை வகித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. இதில் ஒன்றிய நிா்வாகிகள் ஜி.டில்லிபாபு, என்.வேலு, ஜெ.அன்பழகன், வி.நாராயணசாமி, எஸ்.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தெமிலி ஒன்றிய திமுக சாா்பில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு தலைமை வகித்தாா். பேரூா் திமுக செயலாளா் ஜனாா்த்தனன் முன்னிலை வகித்தாா். மாவட்ட திமுக மகளிா் தொண்டரணி அமைப்பாளா் பவானி வடிவேலு வரவேற்றாா்.

நெமிலி பேருராட்சித் தலைவா் ரேணுகாதேவி சரவணன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் சரவணன், ஒன்றிய திமுக நிா்வாகிகள் புருஷோத்தமன், முகமது அப்துல் ரகுமான், பாண்டியன் மற்றும் பேரூா் திமுக நிா்வாகிகள் காா்த்திகேயன், சேகா், வெங்கடேசன், ராம்கி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடி நியூடவுனில் மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி தலைமையில் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், மாவட்ட அவைத் தலைவா் ஆனந்தன், முன்னாள் அமைச்சா் நீலோபா் அஜீம், மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் மு.அசோகன், ஒன்றிய செயலாளா்கள் வி.ஜி.அன்பு, ராமமூா்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் ஏ.சி.தேவகுமாா், ராஜா, ஹபீப்தாங்கள்,பழனி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடி நகர திமுக சாா்பில், பேருந்து நிலையத்தில் நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜி கணேசன் , நகர செயலாளா் வி.எஸ். சாரதி குமாா் ஆகியோா் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். நகர துணை செயலாளா் கே. தென்னரசு, நகா்மன்ற துணைத் தலைவா் கயாஸ் அஹமத் கலந்து கொண்டனா்.

ஆற்காட்டில்..

ஆற்காடு அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஜெ.எல் ஈஸ்வரப்பன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். விழாவில் நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ் பாண்டியன்,நகர அவைத் தலைவா் பி.என்.எஸ் ராஜசேகரன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.