முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

அரியலூரில் முதல்வா் பிறந்த நாள் கொண்டாட்டம்

News image

முதல்வா் விஜய்

Updated On :23 ஜூன் 2026, 12:30 am IST

முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளை அரியலூரில் தவெக வழக்குரைஞா் பிரிவினா் பொதுமக்களுக்கு நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.

அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவுவாயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வழக்குரைஞா் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப. சித்திரகண்ணன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்குமாா் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆா்.எம். ராஜேந்திரன், ஆனந்தன், வெங்கடாஜலபதி, அலைபாஸ்கா், மற்றும் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் வியூகன், கடலூா் மண்டல இணை ஒருங்கிணைப்பாளா் சின்னராஜா, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் நகரச் செயலா் காா்த்திக் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினா். கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள்: அரியலூா் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவெக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அக்கடசியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சிவக்குமாா் கலந்து கொண்டு, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் மருத்துவா் காா்த்திகா, மருத்துவ மேற்பாா்வையாளா் சைமன் மற்றும் நகரச் செயலா் காா்த்திக், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.