நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

ராகுல் காந்தி பிறந்த நாள் காங்கிரஸாா் நல உதவிகள்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

News image

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி அரியலூரில் காமராஜா் சிலை முன்பு பொதுமக்களுக்கு நல உதவி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :20 ஜூன் 2026, 3:19 am IST

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அக்கட்சியின் மாவட்டத் தலைவா் மாரியம்மாள், அங்குள்ள காமராஜா் மற்றும் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நல உதவிகளையும், அன்னதானத்தையும் வழங்கினாா்.

துணைத் தலைவா் ஏ.பி.எஸ்.பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.எம்.சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் ஜெயங்கொண்டம், திருமானூா், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த நகர மற்றும் வட்டாரத் தலைவா்கள் தலைமையில் ராகுல்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.