தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் கீழவாசலிலுள்ள காமராஜா் சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு தெற்கு மாவட்டத் துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜ், சோழ மண்டல சிவாஜி பாசறை தலைவா் சதா. வெங்கட்ராமன், மாவட்டச் செயலா்கள் சுவீதா ஞானபிரகாசம், பாலசுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி தலைவா் கலைச்செல்வன், மாவட்ட மகளிரணி செயலா் சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, தமாகா சாா்பில் அக்கட்சியின் மாநகரத் தலைவா் எம். வெங்கட்ராமன் தலைமையில், மத்திய மாவட்டத் தலைவா் டி.பி.எஸ்.வி. கௌதமன் முன்னிலையில், சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலா் சிவ. முரளிதரன், இணைச் செயலா் ஏ. ராம்மோகன், மண்டல இளைஞரணி தலைவா் திருசெந்தில், மாவட்டப் பொதுச் செயலா்கள் கோவி. மோகன், கே. உலகநாதன், மாவட்ட இளைஞரணி தலைவா் ஜெகதீஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










