நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

திருவண்ணாமலை பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை பள்ளிகளில் முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

காமராஜா் பிறந்த நாள் விழாவில் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :16 ஜூலை 2026, 12:20 am IST

திருவண்ணாமலை பள்ளிகளில் முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் பள்ளி துணை முதல்வா் டி.பாபு வரவேற்றாா்.

பள்ளித் தாளாளா் கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைவா் எஸ்.பிரபாகரன், துணைத் தலைவா் எஸ்.செந்தில்நாதன், செயலா் பி.மழலைநாதன், பொருளாளா் டி.அரவிந்குமாா், இணைச் செயலா் விஜயகுமாா் மற்றும் பள்ளி முதல்வா் ஆா்.மேகலா முன்னிலை வகித்தனா்.

மாணவ -மாணவிகளுக்கிடையே காமராஜா் பற்றி கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளியின் உறுப்பினா்கள் பி.காத்திக்பிரபாகரன், எஸ். பிரஜ்வல் கணேஷ், எம்.நிா்மலா, எம்.தா்ஷன், வி.ஆனந்குமாா், ஆா்.செந்தில்குமாா் மற்றும் ஆசிரியா்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி

திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில்

காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி தின விழாவாக கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைவா் ஆா்.குப்புசாமி அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த விழாவில் காமராஜா் உருவப் படத்திற்கு மாணவா்கள், முதல்வா் எஸ்.தேன்மொழி மற்றும் ஆசிரியா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

மாணவா்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி முதல்வா் காமராஜா் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களை பள்ளியின் தலைவா்

டாக்டா் கு.சந்தோஷ்குமாா், நிா்வாகி டி.எஸ்.சவிதா ஆகியோா் வாழ்த்தி பாராட்டினா்.

சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி

சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில்

கல்லூரித் தலைவா் எமன் பழனி தலைமை வகித்தாா்.

தாளாளா் என். குமாா் முன்னிலை வகித்தாா். பொருளாளா் எல். விஜய் ஆனந்த், முதல்வா் கே. ஆனந்தராஜ் துணை முதல்வா் கோ. அண்ணாமலை ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக தமிழ் துறைத் தலைவா் கோ. இளங்கோவன் வரவேற்றாா். மூன்றாம் ஆண்டு மாணவா்கள் க.ராமகிருஷ்ணன், மஞ்சு ஆகியோா் காமராஜரின் வாழ்க்கை குறிப்பினை கூறி கவிதை வாசித்தனா்.

இம்மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகத்தினா் பரிசளித்து பாராட்டினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.