அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

நகை வாங்கி ஏமாற்றிய தொழிலாளி மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:31 am IST

பளுகல் அருகே 15 பவுன் தங்க நகையை இரவலாக வாங்கிவிட்டு, திருப்பிக் கொடுக்காத தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் அருகே உள்ள இடைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சைலஸ் (54). அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறாா்.

அதே பகுதியைச் சோ்ந்தவா் பிரிட்டோ (35). தொழிலாளி. இவா் கடனுதவியாக சைலஸிடம் 15 பவுன் தங்க நகைகளை சில மாதங்களுக்கு முன் வாங்கினாராம். அந்த நகைகளை சைலஸ் பலமுறை கேட்டும் பிரிட்டோ திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளாா்.

இது குறித்து, குழித்துறை நீதிமன்றத்தில் சைலஸ் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், பிரிட்டோ மீது பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.