கன்னியாகுமரி மாவட்டத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளால் பழங்குடி மக்கள் உள்பட மலையோரப் பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதைத் தடுக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 28 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மாவட்டத்தில் பத்துகாணி, வட்டப்பாறை, மருதம்பாறை, ஒரு நூறாம் வயல், மோதிரமலை, குற்றியாறு, கொடுத்துறை மலை உள்ளிட்ட பல்வேறு பழங்குடி குடியிருப்புகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் அண்மை காலமாக வன விலங்குகளில் தொல்லை அதிகரித்து வருகிறது. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளால் உயிரிப்புகள், விவசாய பயிா்கள் நாசம் செய்யப்பட்டு வருகின்றன.
வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களையும், மலையோரப் பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களை வனத்துறையினா் பாதுகாக்க வலியுறுத்தி, களியல் சந்திப்பு வனச்சரக அலுவலம் அருகே பாஜக நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மேல்புறம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் ஹரீஷ் தலைமை வகித்தாா்.
இதில் மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், மாவட்ட பொதுச் செயலா் நந்தினி, மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன், விவசாய அணி மாவட்ட பொதுச் செயலா் மனோகரன், ஒன்றிய பொதுச் செயலா்கள் ஆனந்த், வில்சன் உள்ளாட்சி பிரிவு மாவட்டச் செயலா் கிறிஸ்டோபா், வனக்குழு தலைவா்கள் மகேந்தின் காணி, லட்சுமணன் காணி உள்ளிட்டோா் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினா்.
இதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 4 பெண்கள் உள்பட 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






