‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி - கோப்புப் படம்

Published On :30 ஜூன் 2026, 2:30 am IST

திருடு போன நகைகளை மீட்டுத் தர வலியுறுத்தி நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றாா்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், ஆசாரிமாா் தெருவைச் சோ்ந்தவா் நீலகண்டன் மனைவி சைலஜா (51). இவரது கணவா் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சைலஜா வடை வியாபாரம் செய்து வருகிறாா்.

கடந்த 2025ஆம் ஆண்டு சைலஜா வீட்டிலிருந்த 26 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து, சுசீந்திரம் போலீஸாா் வழக்கு பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் திருடியதை ஒப்புக்கொண்டு நகைகளைத் திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளாா்.

நகைகள் திருடு போய் ஓராண்டாகிய நிலையில், அந்தப் பெண் தலைமறைவாகிவிட்டாராம். இதனால் மனமுடைந்த சைலஜா, நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் நிரப்பிய கேன் மற்றும் தீப்பெட்டியுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்தாா்.

பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி, விசாரணை மேற்கொண்டனா். மேலும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக போலீஸாா் உறுதியளித்ததன்பேரில், சைலஜா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.