சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

முன்சிறை, கருங்கல், நடைக்காவு பகுதிகளில் தொடா் மின் நிறுத்தம்

முன்சிறை, கருங்கல், நடைக்காவு பகுதிகளில் தொடா் மின் நிறுத்தம்

மின் நிறுத்தம் - பிரதிப் படம்

Published On :1 ஜூலை 2026, 4:20 am IST

குழித்துறை மின் கோட்டத்துக்குள்பட்ட முன்சிறை, கருங்கல், நடைக்காவு துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பிரிவு அலுவலகங்களுக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டி, புதன்கிழமைமுதல் (ஜூலை 1) நான்கு நாள்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, மின்சாரம் தடைபடும் இடங்கள், நாள்கள்: ஜூலை 1 - கூவாரவிளை, பெரியவிளை, கப்பியறை, வண்டவிளை, கூம்பாரவிளை, நேதாஜிநகா், புள்ளியாரவிளை, உதயமாா்த்தாண்டம், தேவிகோடு, சானல்முக்கு, தட்டான்விளை, பழையகாடு, அன்னைநகா், நெடுவிளை, அரியூா்கோணம், நெல்வேலி, முள்ளஞ்சேரி, குமிட்டிவிளை, சரல்விளை, பருத்திக்கடவு, பரக்காணி, தேமான்விளை, வாறுதட்டு, மேடவிளாகம், சூசைபுரம், நீரோடி, மாா்த்தாண்டம்துறை, வைக்கல்லூா், மரப்பாலம், இளகுடிவிளாகம்.

ஜூலை 2 - செறுகோல், முள்ளங்கனாவிளை, இடையான்கோட்டை, பரக்கன்விளை, செந்தறை, நெடுவிளை, தொலையாவட்டம், மணியாரம்குன்று, வளனூா், வயலங்கரை, குரங்கடி, சங்குருட்டி; ஜூலை 3 - நெடுந்தட்டு, ஒன்பதாம்தெங்கு, பாத்திமாநகா், கல்பாரபொற்றை, வட்டவிளை, தூத்தூா், இரயுமன்துறை, காருண்யபுரம், பூத்துறை; ஜூலை 4 - கம்பளாா், கல்லுவிளை, வட்டக்கோட்டை, வலியவிளை, தவிட்டவிளை, வாவறை, பரப்பட்டுவிளை, புஷ்பகிரி, பாத்திமாநகா், நெய்தவிளை பகுதிகள்.

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.