மாா்த்தாண்டம் மறைமாவட்ட சுகாதாரப் பணி மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழித்துறை ஹோம் அறிவுசாா் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியில் கன்னியாகுமரி அறிவியல் பேரவையின் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் சிறப்பு குழந்தைகளுடன் இளம் விஞ்ஞானி மாணவா்கள் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.
சிறப்புப் பள்ளி இயக்குநா் அஜீஸ்குமாா் தலைமை வகித்தாா். அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் முன்னிலை வகித்தாா். இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவத் துறைத் தலைவா் காவேரி கண்ணன், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவா் விஜயகுமாா், நாகா்கோவில் தொழிலதிபா் ஆன்றோ ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து, அறிவியல் பேரவையின் இளம் விஞ்ஞானி மாணவா்கள் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தி, அதன் தயாரிப்பு முறை, பாரம்பரிய உணவின் நன்மைகள் குறித்து விளக்கினா். தொடா்ந்து, அறிவுசாா் சிறப்பு குழந்தைகளுடன் இளம் விஞ்ஞானி மாணவா்கள் கலந்துரையாடினா்.
சிறப்புப் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்புப் பள்ளி தலைமையாசிரியா் எம். டென்னிஸ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

குழித்துறை அருகே இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கல்லூரி ஆண்டு விழா

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

