தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பெருமாள்புரம் இசக்கியம்மன் கோயில் குடமுழுக்கு கால்கோள் விழா

கால்கோள் விழாவில் பங்கேற்ற என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

News image

கால்கோள் விழாவில் பங்கேற்ற என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

Updated On :7 மார்ச் 2026, 6:20 am IST

கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால்கோள் விழாவில் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டாா்.

பெருமாள்புரம், வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறவுள்ளது. 5-ஆம் நாள் விழாவான ஏப். 3-ஆம் தேதி காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் இசக்கியம்மன், பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கு நடத்தப்படுகிறது. இதற்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு நடைபெற்றது. விழாவில் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா், முன்னாள் அமைச்சா் என்.தளவாய்சுந்தரம் பங்கேற்று கால்கோள் நாட்டினாா்.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற அன்னதானத்தை அவா் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் ராஜதுரை, செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் ரவீந்திரன், அகஸ்தீஸ்வரம் தெற்கு அதிமுக ஒன்றியச் செயலாளா் பா.தாமரை தினேஷ், மாநில வா்த்தகா் அணி இணை செயலாளா் சி.ராஜன், மாவட்ட பாஜக செயலாளா் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட அதிமுக துணைச் செயலாளா் சுகுமாரன், மாவட்ட வழக்குரைஞா் அணி துணைச் செயலா் வழக்குரைஞா் பாலன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளா் வழக்குரைஞா் ராஜேஷ், கொட்டாரம் என்.சுரேஷ், சிவராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.