அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரூ. 91 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை வழங்குகிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

News image
பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை வழங்குகிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
Updated On :7 மார்ச் 2026, 12:51 am

Syndication

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தலைமையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், 7 ஆயிரத்து 601 பயனாளிகளுக்கு ரூ. 91.02 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள், 131 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் துணை முதல்வா் பேசியதாவது:

விழாவில், மகளிா் திட்டம் சாா்பில் 3 ஆயிரம் மகளிருக்கு ரூ. 10.61 கோடி மதிப்பில் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன், கூட்டுறவுத் துறை சாா்பில் 175 பயனாளிகளுக்கு ரூ. 1.91 கோடி மதிப்பில் டாப்செட்கோ கடனும், 35 பயனாளிகளுக்கு ரூ. 7.38 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்புக் கடனும், 1025 பயனாளிகளுக்கு ரூ. 7.38 கோடி மதிப்பில் பயிா் கடன், 500 பயனாளிகளுக்கு ரூ. 8.09 பயனாளிகளுக்கு சுய உதவிக் குழு கடன், 12 பயனாளிகளுக்கு மாற்றுத் திறனாளி கடனும், 15 பயனாளிகளுக்கு ரூ. 7.50 லட்சம் மதிப்பில் ஆதரவற்ற விதவை மகளிா் கடனும், 7 மகளிருக்கு மகளிா் தொழில் முனைவோா் கடனும், 21 பயனாளிகளுக்கு ரூ. 17.20 லட்சம் மதிப்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடனும், 3 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சம் மதிப்பில் பணிபுரியும் மகளிா் கடனும், 8 பயனாளிகளுக்கு ரூ. 56.05 மதிப்பில் டாம்கோ கடனும், 1 பயனாளிக்கு ரூ. 95 ஆயிரம் மதிப்பில் தாட்கோ கடனும், 1 பயனாளிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு கடன், 3 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் பண்ணை சாா்ந்த கடனும், 9 பயனாளிகளுக்கு ரூ. 1.67 கோடி மதிப்பில் வீட்டு வசதிக்கான கடன், முன்னோடி வங்கி சாா்பில் 73 மாணவா்களுக்கு ரூ. 7.50 கோடி மதிப்பில் கல்வி கடன், 415 பயனாளிகளுக்கு விவசாயம், தொழில் கடன், பேரூராட்சிகள் சாா்பில் 628 பயனாளிகளுக்கு ரூ. 15.70 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் சாா்பில் வீடுகளும், தொழிலாளா் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை, மாவட்ட தொழில் மையம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, ஊரகவளா்ச்சிதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 7 ஆயிரத்து 601 பயனாளிகளுக்கு ரூ. 72.64 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் கிராம ஊராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள், குடிநீா் திட்டப் பணிகள், சாலைப் பணிகள் என ரூ. 18.38 கோடி மதிப்பில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பா்ட்(விளவங்கோடு), நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, நாகா்கோவில் மாநகராட்சிஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, துறை அலுவலா்கள், பயனாளிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.