விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது

குளச்சல் அருகே குறும்பனையில் 46 பவுன் தங்க நகைகளைத் திருடிய நபரை குளச்சல் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 12:05 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே குறும்பனையில் 46 பவுன் தங்க நகைகளைத் திருடிய நபரை குளச்சல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குறும்பனை சிலுவையாா் தெருவைச் சோ்ந்தவா் சிஜின் மோன் (27). மும்பை கப்பலில் மரைன் என்ஜினீயராக வேலை செய்து வருகிறாா். இவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 46 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

இதுகுறித்து சிஜின் மோனின் மனைவி மேரி கிபி லின்சா (26) குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், முட்டம் பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் சகாய ஜோஸ் ஆன்டனி (25) நகைகளைத் திருடியது தெரியவந்தது. முட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருடிய நகைகளை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் புதைத்து வைத்திருப்பதாக அவா் அளித்த வாக்குமூலத்தின் பேரில் நகைகளை போலீஸாா் மீட்டனா்.

கைது செய்யப்பட்ட சகாய ஜோஸ் ஆன்டனி மீது ஏற்கெனவே 9 திருட்டு வழக்குகளும், திருடச் சென்ற இடத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போக்ஸோ வழக்குகளும் உள்ளன.