பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

தாழையூத்து அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:47 am IST

தாழையூத்து அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த தம்பதி முருகேசன்(52)- கோமதி. இவா்களது வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 19 கிராம் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றிருப்பது கடந்த 26 ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து கோமதி தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்தபுகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அதே பகுதி சப்பாணிமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மனைவி மகராசி(36) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.