சாமிதோப்பு அருகே புதரில் வீசி சென்ற பெண் சிசு உயிரிழந்தது. இது தொடா்பாக கல்லூரி மாணவி காதலனுடன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சாமிதோப்பை அடுத்த பொற்றையடி கரம்பவிளையில் உள்ள கோயில் பின்புற புதரில் பெண் சிசு சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தென்தாமரைகுளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சடலத்தை கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த நா்சிங் மாணவி ரெஜினா (20) என்பவா் சிசுவை வீசிச் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து ரெஜினாவிடம் நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி பகுதியைச் சோ்ந்த முகேஷ் (25) என்பவா் சமூக வலைதளம் மூலம் இவருக்கு அறிமுகமாகி, கடந்து 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில் ரெஜினா கா்ப்பமடைந்தாராம்.
கடந்த திங்கள்கிழமை வீட்டின் கழிவறையில் ரெஜினாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். குழந்தை வேண்டாம்; நாம் எங்காவது சென்றுவிடலாம் என முகேஷ் கூறினாராம்.
பெண் சிசுவை பையில் கட்டி கோயில் பின்புறம் உள்ள புதரில் ரெஜினா வீசிவிட்டு சென்ால் பராமரிப்பின்றி சிசு அங்கேயே உயிரிழந்தது தெரியவந்தது.
ரெஜினாவையும், முகேஷையும் போலீஸாா் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கனரக வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு: சாலை மறியல்

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

பெண் வன்கொடுமை வழக்கில் கல்லூரி மாணவா் கைது

காதலனுடன் தப்பிச் செல்ல ரகசிய திட்டம்! மனைவி, 5 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன் கைது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

