கன்னியாகுமரி அருகேயுள்ள சுவாமிநாதபுரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ. 12 லட்சம், 13 பவுன் நகை திருடப்பட்டது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
சுவாமிநாதபுரம் பகவத்சிங் தெருவைச் சோ்ந்தவா் பொன்னையா. இவா் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி முத்துலெட்சுமி. இத்தம்பதியின் மூத்த மகன் ரபீன் துபாயில் பணிபுரிந்து வருகிறாா். 2 ஆவது மகன் லெமீஸ் ஹைதராபாத்தில் படித்து வருகிறாா்.
இந்நிலையில் முத்துலெட்சுமி சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு வடக்கன்குளத்தில் உள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்றாராம். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பூஜை அறையில் இருந்த ரூ. 12 லட்சம் பணம், 13 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
சேலத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
செங்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சிங்காநல்லூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், ரூ.20 ஆயிரம் திருட்டு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
