முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

குமரி மாவட்டத்தில் 18 மதுக் கடைகள் மூடல்: குளச்சல் எம்எல்ஏ பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 அரசு மதுக் கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் நன்றி தெரிவித்தாா்.

News image
Updated On :13 மே 2026, 1:22 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 அரசு மதுக் கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடித விவரம்:

குமரி மாவட்டத்தில் 98 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதில், சில கடைகள் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் அருகே அமைந்துள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற நீங்கள் பொறுப்பேற்ற ஓரிரு நாள்களிலேயே வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் அருகே செயல்பட்டு வரும் 18 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது.

இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் பெரிய நம்பிக்கையை தரும் அறிவிப்பாக உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.