கோடை விடுமுறை சுற்றுலா சீசனை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் கன்னியாகுமரி பூம்புகாா் படகு சேவை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட, தமிழக அரசின் பூம்புகாா் படகு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3 சொகுசுப் படகுகள் காலை 8 முதல் மாலை 4 மணி வரை இடைவிடாமல் இயக்கப்படுகின்றன.
தற்போது சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் தினசரி சுமாா் 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு நினைவு மண்டபங்களை பாா்வையிடுகின்றனா்.
அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி சீசன் முடியும் வரை வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு சேவை ஒரு மணி நேரம் முன்னதாக காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது
இன்றைய மின் தடை: பண்ருட்டி

என்ஜின் பழுது: 2 மணி நேரம் தாமதமாக நெல்லை சென்றடைந்த செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில்

கன்னியாகுமரி - சென்னை ரயில் தாமத புறப்பாடு: பயணிகள் அவதி

குமரியில் சூறைக்காற்று: படகு சேவை 5 மணி நேரம் ரத்து
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



