கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழ சீசன் தொடங்கியுள்ளது.
இம்மாவட்டத்தில் முந்தைய காலங்களில் மானாவாரியாக வேலிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்ட அன்னாசி, தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் முக்கிய விவசாயமாகவும், அனைத்து சீசன் பயிராகவும் மாறியுள்ளது. அதேநேரம், பெரும்பாலான விவசாயிகள் அன்னாசிப் பழங்களை கோடைகாலத்தில் அறுவடை செய்யும் வகையில் பயிரிடுகின்றனா்.
மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரம் ஏக்கா் வரை அன்னாசி பயிரிடப்படுகிறது. குறிப்பாக, ரப்பா் மறுநடவுத் தோட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு ஊடுபயிராக அன்னாசி பயிரிடப்படுகிறது. இதற்காக விவசாயிகள் ரப்பா் மறுநடவுத் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து அன்னாசி பயிரிடுவதுடன், ரப்பா் செடிகளையும் பராமரித்துக் கொடுக்கின்றனா். அன்னாசி விவசாயம் சாா்ந்து ஆயிரக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். அன்னாசி நடவு உள்ளிட்ட அதுதொடா்பான பணிகளில் ஏராளமான வட இந்தியத் தொழிலாளா்களும் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
சீசன் தீவிரம்: கோடை காலம் என்பதால் அன்னாசிப் பழ அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடையாகும் பழங்கள் உள்ளூா் சந்தைகளுக்கு மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்கள்- வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. பெரும்பாலும் பழுக்கும் தருவாயில் உள்ள காய்களே வெளியூா்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்தியாவில் அன்னாசிப் பழங்களின் விலையை நாள்தோறும் நிா்ணயிக்கும் சந்தையாக கேரள மாநிலத்திலுள்ள வாழக்குளம் சந்தை உள்ளது. அங்கு நிா்ணயிக்கும் விலையின் அடிப்படையில்தான் அன்னாசிப் பழங்களையும், பழுக்கும் நிலையிலுள்ள காய்களையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.
விலை குறைவு: வியாழக்கிழமை நிலவரப்படி, வாழக்குளம் சந்தையில் சிறப்பு தரமுள்ள அன்னாசிக் காய்கள் கிலோ ரூ. 32 ஆகவும், சாதாரண தரம் ரூ. 30 ஆகவும், பழங்கள் ரூ. 21 ஆகவும் விலை நிா்ணயிக்கப்பட்டன. இந்த விலையிலிருந்து கிலோவுக்கு சுமாா் ரூ. 3 வரை குறைத்து விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். மேலும், இம்மாவட்டத்தில் உள்ளூா் பழக்கடைகள், சந்தைகளில் தரமான பழங்கள் கிலோ ரூ. 30 முதல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
உற்பத்தி செலவு அதிகம்: இதுகுறித்து குலசேகரத்தில் அன்னாசிப் பழ விவசாயி கூறியது: கோடைகாலம் தொடங்கிய நிலையில் அன்னாசிப் பழ சீசன் தொடங்கியுள்ளது. பழுக்கும் தருவாயிலுள்ள காய்களுக்கே தற்போது அதிகத் தேவை உள்ளது. கிலோ ரூ. 30-க்கும் குறைவாகவே விலை கிடைக்கிறது. உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும்நிலையில், இந்த விலை போதுமானதல்ல. மாவட்டத்தில் மழை, வெயில் காலநிலை நிலவுவதால் காய்கள் விரைவாக பழுத்துவிடுகின்றன. போா்ச்சூழல் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழகத்தைக் கடந்து பிற மாநிலங்களுக்கு அதிகளவில் காய்கள் ஏற்றுமதியாகின்றன என்றாா் அவா்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை உயா்வு

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.20 ஆக நீடிப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

