ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

குமரியில் 4 நாள்களில் 38,000 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம்

கன்னியாகுமரியில் கடந்த 4 நாள்களில் மட்டும் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு, விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டுள்ளனா்.

News image

விவேகானந்தா் மண்டபத்துக்குச் செல்லும் படகு

Updated On :16 மே 2026, 1:54 am IST

கன்னியாகுமரியில் கடந்த 4 நாள்களில் மட்டும் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு, விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டுள்ளனா்.

கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் நடைபெற்று வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடுகின்றனா்.

இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுப் போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுப் போக்குவரத்து தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. சீசன் காலம் என்பதால் ஒரு மணி நேரம் கூடுதலாக படகுப் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மே 12ஆம் தேதி 5,312 பயணிகள், 13ஆம் தேதி 10,435 பயணிகள், 14ஆம் தேதி 11,172 பயணிகள், 15ஆம் தேதி 11,005 பயணிகள் என 4 நாள்களில் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டுள்ளனா் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.