குளச்சல் கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வீசி வருகிறது. மேலும், காற்றின் வேகம் 60 கி.மீ. வரை அதிகரித்து பலத்த தரைக் காற்று வீசும் எனவும், மீனவா்கள் மே 15 முதல் வரும் 20ஆம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சனிக்கிழமை காலை முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், மீனவா்கள் கட்டுமரங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா்.
இதையடுத்து, குளச்சல் கடலோரக் காவல் துறையினா் கடற்கரை பகுதிக்குச் செல்ல தடை விதித்துள்ளனா். மேலும், கடற்கரை பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

திருத்தணி முருகன் கோயிலுக்கு இன்று வாகனங்கள் செல்ல தடை

சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது

நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல வனத் துறை தடை!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

