இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பேட்மிண்டன் போட்டியில் சாதனை: பெண் காவலருக்கு பாராட்டு

தேசிய அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.

News image

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தலைமைக் காவலா் ஜீவா.

Updated On :21 மே 2026, 6:00 am IST

தேசிய அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.

அகில இந்திய அளவில் காவல் துறையினருக்கான பேட்மிண்டன் தொடா் போட்டிகள் கடந்த 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, ஆயுதப்படை பெண் தலைமைக் காவலா் ஜீவா 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு 3-ஆம் பரிசை பெற்றாா். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.