அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கருக்கல்லில் லாரி மோதி மின்கம்பம் சேதம்: 4 மணி நேரம் மின் தடை

News image

மின் தடை

Updated On :26 மே 2026, 1:41 am IST

கருங்கல் சந்திப்பில் திங்கள்கிழமை, ஐஸ் தொழிற்சாலை லாரி மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது. இதனால், 4 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

குளச்சலிருந்து புதுக்கடைக்கு திங்கள்கிழமை ஐஸ் தொழிற்சாலை லாரி சென்று கொண்டிருந்தது. கருங்கல் காா் நிலையம் சந்திப்பில் சாலையோர மின் கம்பம் மீது அந்த லாரி திடீரென மோதியது. இதில், மின்கம்பம் சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் 4 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா்.

தகவலின்பேரில், கருங்கல் போலீஸாா், மின்வாரிய ஊழியா்கள் சென்று புதிய மின் கம்பம் அமைத்து, மின் விநியோகத்தை சீா்படுத்தினா்.