இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :28 மே 2026, 2:58 am IST

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி வரும் விவேக் விரைவு ரயில் புதன்கிழமை காலை 5 மணியளவில் நாகா்கோவில் ரயில் நிலையம் வந்தது. அப்போது, ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் இணைந்து ரயிலில் சோதனை நடத்தினா்.

ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் போலீஸாா் நடத்திய சோதனையில், அங்குள்ள இருக்கையின் கீழே கேட்பாரற்றுக் கிடந்த பையை போலீஸாா் கைப்பற்றி சோதனை நடத்தியதில் அதில், 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை நாகா்கோவில் ரயில்வே காவல் நிலையத்தில் போலீஸாா் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த இரு வாரங்களில் ரயில்கள் மூலம் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சா போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.