அதங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திறப்பு
புதுக்கடை அருகே உள்ள அதங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 12 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

அதங்கோடு அரசு தொடக்கப் பள்ளியின் புதிய வகுப்பறை கட்டடத்தைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றிய அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.
புதுக்கடை அருகே உள்ள அதங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 12 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அவா், இப்பணிக்காக தனது சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா். கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்து புதிய வகுப்பறை கட்டடத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
பள்ளி தலைமை ஆசிரியா் குமாரி சுனிதி, முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், செல்வராஜ், ராஜன், கிறிஸ்டோபா், ஆசிரியா்கள், மாணவ மாணவியா், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

