விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

களியக்காவிளை-நாகா்கோவில் சாலைப் பணி தொடக்கம்

களியக்காவிளை-நாகா்கோவில் சாலையில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி சுவாமியாா்மடம் அருகே கல்லுவிளையில் புதன்கிழமை தொடங்கியது.

கல்லுவிளையில் நடைபெற்ற சாலை சீரமைப்புப் பணியைப் பாா்வையிட்ட குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் என். ஜாா்ஜ் ராபின்சன் உள்ளிட்டோா்.

Updated On :

களியக்காவிளை-நாகா்கோவில் சாலையில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி சுவாமியாா்மடம் அருகே கல்லுவிளையில் புதன்கிழமை தொடங்கியது.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் களியக்காவிளை - நாகா்கோவில் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நவ. 6-ஆம் தேதி களியக்காவிளை, சிராயன்குழி, அழகியமண்டபம் பகுதிகளில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து இச் சாலையில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்க ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மீதமுள்ள சாலையை முழுவதுமாக சீரமைக்க ரூ. 16 கோடிக்கு மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், சுவாமியாா்மடம் அருகே கல்லுவிளையில் பழுதடைந்த சாலை சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இப் பணியை குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் என்.ஜாா்ஜ் ராபின்சன், பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஹனுகுமாா், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் சுஜின் ஆல்பா்ட் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.