குமரி மாதா திருத்தல பங்குப்பேரவை நிா்வாகிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கன்னியாகுமரி அலங்கார உபகாரமாதா தேவாலய திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாதா திருத்தல பங்குப்பேரவை நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன் என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

Updated On :

கன்னியாகுமரி அலங்கார உபகாரமாதா தேவாலய திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி அலங்கார உபகாரமாதா திருத்தல திருவிழா டிச. 4- ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.

இதையடுத்து பங்குப்பேரவை நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்துப் பேசினாா். என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், திருத்தல பங்குத்தந்தை மைக்கேல் ஏஞ்சலோ, பங்குப்பேரவை துணைத்தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.