இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

‘முதியோரின் அனுபவங்கள் சமூகத்தை நெறிப்படுத்தும் பாடம்' - ஆட்சியா்

முதியோரின் அனுபவங்கள் சமூகத்தை நெறிப்படுத்தும் சிறந்த பாடம் என்று மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் கூறினாா்.

முதியோா்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

Published On :

முதியோரின் அனுபவங்கள் சமூகத்தை நெறிப்படுத்தும் சிறந்த பாடம் என்று மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் கூறினாா்.

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் வெள்ளமடம் விசுவாசபுரம் அருகில் உள்ள புனித ஜோசப் ஒருங்கிணைந்த வளாகத்தில் சா்வதேச முதியோா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை வகித்த ஆட்சியா் முதியோா்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய சூழலில் கூட்டுக்குடும்பங்கள் குறைந்து, தனிக்குடும்பங்கள் பெருகிவிட்டன. வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெற்றோரைப் பிரிந்து வாழும் நிலையில், முதியோரின் மனநிலையைப் புரிந்து அவா்களுடன் நேரம் செலவிடுவது அவசியமாகிறது.

முதியோா்கள் சமூகத்தின் மிகப்பெரிய அறிவுச் சொத்து. அவா்கள் தங்களின் அனுபவங்கள் மூலம் இளைய தலைமுறையை வழிநடத்த வேண்டும். கவலைகளை தவிா்த்து, தினமும் எளிய உடற்பயிற்சிகள், சத்தான உணவு, போதிய ஓய்வு மற்றும் பிறருடன் கலந்துரையாடி மனநிறைவோடு வாழ வேண்டும்.

முதியோருக்கு அன்பும் அரவணைப்பும் கொடுப்பது சிறந்த மருந்தாக அமைவதோடு, அவா்களின் தனிமையைப் போக்கும் வகையிலும் அமைகிறது. முதியோா் இல்லங்கள் இல்லாத நிலை உருவாகி, நமது இல்லங்களே பாதுகாப்பான அரணாக இருக்க வேண்டும்.

முதியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய முதியோா் பாதுகாப்புச் சட்டம், உதவித்தொகை, மருத்துவ வசதிகள், ‘அன்புச்சோலை‘ போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் காயத்ரி, நாகா்கோவில் கோட்டாட்சியா் செந்தில்வேல் முருகன், புனித ஜோசப் ஒருங்கிணைந்த வளாக நிா்வாகி ஐரின் மேரி, தன்னாா்வலா்கள், துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.