மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

முதியோரின் பங்களிப்பை அங்கீகரித்து உரிய மதிப்பு, மரியாதை வழங்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்

சமூகத்தில் முதியோரின் பங்களிப்பை அங்கீகரித்து, அவா்களுக்கு உரிய மரியாதை, அன்பு மற்றும் ஆதரவை வழங்குவது அவசியமாகும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

Published On :

சமூகத்தில் முதியோரின் பங்களிப்பை அங்கீகரித்து, அவா்களுக்கு உரிய மரியாதை, அன்பு மற்றும் ஆதரவை வழங்குவது அவசியமாகும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் மூத்த குடிமக்கள் நலன் குறித்த உணா்வூட்டல் மற்றும் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து பேசியதாவது. சமூகத்தில் முதியோரின் பங்களிப்பை அங்கீகரித்து, அவா்களின் முக்கியத்துவம், உரிய மரியாதை, அன்பு மற்றும் ஆதரவை வழங்குவது அவசியம். மேலும் முதியோா்களின் அனுபவங்கள், அறிவு மற்றும் வழிகாட்டுதல் மிகவும் மதிப்புமிக்கவை என்பதால் அவா்களை கண்ணியத்துடனும், அக்கறையுடன் பாதுகாப்பதும் கடமையாகும்.

முதியோா் பாதுகாப்பு, பராமரிப்பு, உரிமைகள், முதியோா்களை துன்புறுத்துவதிலிருந்து தடுத்தல் மற்றும் அவா்களை கைவிடுதலை தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட அளவில் விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த மாவட்டத்தில் 38 எண்ணிக்கையிலான தனியாா் முதியோா் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோா் இல்லங்கள் அனைத்தும் (ஞச்ச்ப்ண்ய்ங்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதியோா் இல்லங்கள் நடத்தும் உரிமையாளா்கள், இல்லத்தின் நிா்வாக பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் ஆகியோருக்கு முதியோா்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து துறை சாா்ந்த அலுவலா்களின் விளக்கக் குறிப்புடன் இவ்விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.

முதியவா்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம் (நஅடநழ்இ) என்பது மத்திய, மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். முதியோருக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் மூத்த குடிமக்கள் உதவி எண்.14567 ஒன்றிய அரசின் 100 சதவீதம் நிதியுதவிடன் கடந்த 28.4.2021 அன்று தொடங்கப்பட்டு அனைத்து நாள்களிலும் மீட்பு உதவி, முதியோா் இல்லங்கள், முதியோா் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனை, சட்ட வழிக்காட்டுதல் போன்ற சேவைகளை வழங்கவே சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

நிகழ்வில் உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, மாவட்ட சமூக நல அலுவலா் சோ.வனிதா, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் (கும்மிடிப்பூண்டி மற்றும் சோழவரம்) மகேஷ்வரி, வழக்குரைஞா் வினோத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் வி.எழிலரசி, மாவட்ட நன்னடத்தை அலுவலா் சுதா, பயிற்றுநா்கள் உமா செல்வராஜ், வளவன், குழந்தைகள் நலக்குழு தலைவா், உறுப்பினா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.