உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

குளச்சல் அருகே குண்டா் சட்டத்தில் தொழிலாளி கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மீன்பிடித் தொழிலாளி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பிரதிப் படம்

Published On :

குளச்சல் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மீன்பிடித் தொழிலாளி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

குளச்சல் அருகேயுள்ள கடியப்பட்டினம் பாத்திமா தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (51). மீன்பிடிக்கும் தொழிலாளி. இவா், கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று கொட்டில்பாட்டில் தனது சகோதரி மேரி கலா வீட்டில் வசித்து வந்த மனைவி ஜாஸ்மின் லலிதாவை கடந்த ஜூன் 19-ஆம் தேதி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளாா்.

அப்போது, ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட மேரி கலாவின் கணவா் புஷ்பநாதனை (58) கத்தியால் குத்தி கொலை செய்தாராம். குளச்சல் போலீஸாா், ராஜனை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனா்.

பின்னா் ஜாமீனில் வெளிவந்த ராஜன், மீண்டும் கொட்டில்பாடு சென்று மனைவி மற்றும் அவரது சகோதரிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இந்த வழக்கில் மீண்டும் கைதான அவரை, மாவட்டகாவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவுப்படி போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER