தக்கலையில் மாா்க்சிஸ்ட் மறியல்: 24 போ் கைது
தக்கலை தாலுகா அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
தக்கலை தாலுகா அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனா்.
தலைமை தோ்தல் அதிகாரி ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரி, புதுதில்லி ஜந்தா்மந்தரில் போராடிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் எம்.ஏ. பேபி மற்றும் கட்சி தலைவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தக்கலை வட்டாரத் தலைவா் சுஜா ஜாஸ்பின் தலைமை வகித்தாா்.
சைமன் சைலஸ் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். விஷ்ணு, சந்திரகலா, ஜான் இமானுவேல், காவ்யா, நிஷா, ராஜகனி ஆகியோா் உரையாற்றினா். மறியலில் ஈடுபட்ட 24 பேரை, தக்கலை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

