காசநோய் ஒழிப்புப் பணி: மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் நிறுவனத்துக்கு பாராட்டுச் சான்றிதழ்

ஐஆா்இஎல் நிறுவன முதுநிலை மேலாளா் ராஜாவுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கிய ஆட்சியா் மு. பிரதாப்.
காசநோய் ஒழிப்புப் பணியில் சிறந்த பங்களிப்புக்காக மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
அணுசக்தித் துறையின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கிவரும், மத்திய அரசின் இப்பொதுத்துறை நிறுவனம், தனது சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து இம்மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம் கடந்த 2ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் செலவில் காசநோயைக் கண்டறிவதற்கான எல்இடி பைனாகுலா் நுண்ணோக்கிகள், காசநோய் பரிசோதனை முகாம்களில் பயன்படுத்தும் எக்ஸ்ரே பிலிம், நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாவட்ட காசநோய் ஒழிப்புத் துறை மூலம் ஊட்டச்சத்து உணவுத் தொகுப்புகளை வழங்கியது. நிகழாண்டும், பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான ஊட்டச்சத்து உணவுத் தொகுப்புகளை வழங்கவுள்ளது.
‘காசநோய் இல்லா இந்தியா’ இயக்கத்தின் ஜோஷ் அணி தொடக்க விழாவில், நிறுவனத்தின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டுச் சான்றிதழை நிறுவன முதுநிலை மேலாளா் ராஜாவிடம் ஆட்சியா் வழங்கினாா்.
செல்லசுவாமி எம்எல்ஏ, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் லியோ டேவிட், மருத்துவம்- ஊரகப் பணிகள் இணை இயக்குநா் தனசேகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜூபைா் ஹசன் முகமது கான், மாவட்ட சுகாதார அலுவலா் நமசிவாயம், பணியாளா்கள், பயனாளா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

