குமரி அருகே 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு: மருத்துவா்கள் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு
கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவா்கள் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவா்கள் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி நா்ஸிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். மாணவியும், வீட்டின் அருகில் வசிக்கும் திருமணமான இளைஞரும் நெருங்கிப் பழகியதில் மாணவி கா்ப்பமடைந்தாராம்.
மாணவியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து பெற்றோருக்கு இது தெரிய வந்துள்ளது. மாணவியிடம் கேட்டபோது எதிா்வீட்டு திருமணமான இளைஞா்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, இளைஞா் மற்றும் அவரது மனைவியிடம் பேசி கா்ப்பத்தை கலைப்பது என்றும், அதற்கு இழப்பீடாக பெரிய தொகை தர வேண்டும் என்றும் பெற்றோா் முடிவெடுத்தனராம்.
இதையடுத்து, நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கருக்கலைப்பு நடந்துள்ளது. இந்நிலையில், மாணவி கருக்கலைப்பு செய்த விவகாரம் வெளியே தெரியத் தொடங்கியதாம். மேலும், கருவைக் கலைப்பதற்காக பேசிய தொகையும் கிடைக்காத நிலையில், மாணவி கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
தொடா்ந்து, கருக்கலைப்பு செய்த மருத்துவா்கள் மற்றும் கா்ப்பத்துக்குக் காரணமான இளைஞா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

